ஈழத்தீவின் இறுதி மன்னன் தமிழன்!

சிங்களப் பிரதானிகளால் காட்டிக் கொடுக்கப்பட்ட கண்டி மன்னன் கண்ணுச்சாமி!

Published on 19/03/2026
ஈழத்தீவின் இறுதி மன்னன் தமிழன்!

கண்டியைத் தலைநகராகக் கொண்டு ஈழத்தீவை ஆண்ட கடைசி மன்னன் ஒரு தமிழன் - கண்ணுச்சாமி சிறீவிக்கிரம ராஜசிங்கன்!

எமது ஈழத்தமிழ் மன்னன் கண்ணுச்சாமியிடம் பேசுவெதன்றால் அவருடைய சிங்கள அமைச்சர்கள் தொடக்கம் தளபதிகள் வரை அவரின் முன் முழங்காலில் நின்று மண்டியிட்டுத் தான் பேச வேண்டும்.

இவர் வன்னித் தமிழ் மன்னன் பண்டார வன்னியரின் நண்பர்.

வன்னியில் இருந்து 1803ஆம் ஆண்டு தந்திரோபாயமாகப் பின்வாங்கிய பண்டார வன்னியருக்கு கண்டி மன்னன் கண்ணுச்சாமி மொனராகலையில் தளம் அமைத்துக் கொடுத்ததோடு, ஆங்கிலேயருக்கு எதிரான போரில் 1811ஆம் ஆண்டு பண்டார வன்னியர் வீரச்சாவடையும் வரை அவருக்குத் தேவையான படை உதவிகளையும் வழங்கினார்.

இறுதியில் 1815ஆம் ஆண்டு சிங்கள அமைச்சர்களால் ஆங்கிலேயர்களிடம் காட்டிக் கொடுக்கப்பட்டு, தமிழகத்திற்கு நாடு கடத்தப்பட்டு, அங்குள்ள வேலூர் கோட்டையில் சிறைவைக்கப்பட்டு 1832ஆம் ஆண்டு எமது ஈழத்தமிழ் மன்னன் கண்ணுச்சாமி இயற்கை எய்தினார்.



தமிழனைத் துரோகிகளின் உதவியின்றி எதிரிகளால் ஒரு போதும் வீழ்த்தவே முடியாது.