தேசத்தின் புதல்வி செல்வி துவாரகா பிரபாகரன் அவர்களின் இருப்பை மறுதலிக்க ஐ.பி.சி துடிப்பதன் பின்னணி என்ன?

- சேரமான்

Published on 06/12/2023
தேசத்தின் புதல்வி செல்வி துவாரகா பிரபாகரன் அவர்களின் இருப்பை மறுதலிக்க ஐ.பி.சி துடிப்பதன் பின்னணி என்ன?

சிங்கள அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள யாழ்ப்பாணத்தில் இருந்து சிங்கள அரசின் நெறிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு இயங்கும் ஊடகம் இன்றைய கந்தையா பாஸ்கரனின் ஐ.பி.சி.

இறுதி யுத்தத்தில் பதில் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்து தமிழின அழிப்பை மேற்பார்வை செய்த மைத்திரிபால சிறீசேனவுடன் ஐ.பி.சியின் தலைவர் கந்தையா பாஸ்கரன் பெருமிதத்தோடு படம் எடுத்து வெளியிட்டது ஏற்கனவே தெரிந்த ஒன்று தான்.

அது போல் சிங்கள இராணுவத்தின் இரத்தம் தமிழர் உடலில் ஓடுகின்றது என்ற நிகழ்ச்சியை 2016ஆம் ஆண்டு ஐ.பி.சி தயாரித்து வெளியிட்டதையும் யாரும் மறந்து போய் விடவில்லை.

அது மட்டுமன்றி இரட்டைக் கோபுரத் தாக்குல்களோடு இயக்கத்தைத் தொடர்புபடுத்தும் தொனியில் 2017ஆம் ஆண்டு ஐ.பி.சி பத்திரிகையில் அதன் பணிப்பாளர் நிராஜ் டேவிட் எழுதி வெளியிட்ட கட்டுரையையும் எமது மக்கள் மறந்து விடவில்லை.

ஆனாலும் கூட தேசத்தின் புதல்வியின் வருகையைக் கருத்தில் எடுத்து ஐ.பி.சியோடு நல்லுறவை ஏற்படுத்த நான் முயற்சித்தேன்.

என்னோடு உரையாடிய ஐ.பி.சியின் பணிப்பாளர் நிராஜ் டேவிட், தேசத்தின் புதல்வியின் உரை வெளிவந்ததும் அதை செய்தியாக வெளியிடுவதாக எனக்கு உத்தரவாதம் அளித்தார்.

ஆனால் 27.11.2023 அதிகாலையில் இருந்து நான் தன்னைத் தொடர்பு கொள்ள முடியாத வகையில் எனது எண்ணை நிராஜ் டேவிட் தற்காலிகமாக தடை செய்தார்.

அது மட்டுமன்றி தேசத்தின் புதல்வியைக் கேவலப்படுத்தும் வகையில் சாந்தி ரமேஷ் என்பவர் ஐ.பி.யில் செவ்வி வழங்கிய போது அதற்கு பதிலளிப்பதற்கு எமது தரப்பில் ஒருவரை செவ்வி காணுமாறு நிராஜ் டேவிட்டிடம் நான் கேட்டேன்.

அதற்கு கோபி சிவந்தனை செவ்வி காண்பதாக நிராஜ் டேவிட் உத்தரவாதம் அளித்தார்.

ஆனால் கடைசி வரை அதை அவர் செய்யவில்லை.

சரி, நடந்தது நடந்ததாக இருக்கட்டும்.

இப்போது நிராஜ் டேவிட் சுவிற்சர்லாந்தில் ஒலிவாங்கியோடும், ஒளிப்பதிவுக் கருவியோடும் அலைந்து திரிகின்றார்.

எதற்காக?

தேசத்தின் புதல்வியின் இருப்பை மறுதலிப்பது தான் அவரது நோக்கம் என்று அவரை சந்தித்தவர்கள் கூறுகின்றார்கள்.

அதை எப்படிச் செய்ய நிராஜ் டேவிட் உத்தேசித்துள்ளார்?

இறுதி யுத்தத்தில் சிங்களப் படைகளிடம் சரணடைந்து இயக்கத்தைக் காட்டிக் கொடுத்து அதற்கான சன்மானமாக சுவிற்சர்லாந்திற்கு வந்து உல்லாச வாழ்க்கை வாழும் கோடரிக்காம்புகளை செவ்வி கண்டு அவர்கள் சொல்லும் பொய்களை உண்மை போன்று சித்தரிப்பதற்கான முயற்சிகளில் நிராஜ் டேவிட் ஈடுபட்டிருப்பதாக அவரை சந்தித்தவர்கள் கூறுகின்றார்கள்.

இதன் உண்மைத் தன்மை பற்றி அறிய நானே நிராஜ் டேவிட் அவர்களுக்கு இன்று அழைப்பு எடுத்தேன்.

எனது அழைப்பை அவர் ஏற்கவில்லை.

உண்மையைப் பொய்மையின் தரிசனத்தால் அழித்து விட இயலாது.

தேசத்தின் புதல்வி துவாரகா அவர்களின் இருப்பை ஐ.பி.சியாக இருந்தாலும் சரி, எந்தத் தரப்பாக இருந்தாலும் சரி அவர்கள் வெளியிடப் போகும் புனைவுகளால் மறுதலித்து விட முடியாது.

27.11.2023 அன்று கொள்கைப் பிரகடன உரை ஆற்றியது எங்கள் தேசத்தின் புதல்வி, எங்கள் தேசத்தின் தலைமகள், எங்கள் பாசத்துக்குரிய தங்கச்சி துவாரகா தான்.

இப்போது ஒளிப்பதிவு ஒன்றின் மூலம் வெளிப்பட்டிருக்கும் எங்கள் தேசத்தின் புதல்வி இனி வரும் காலங்களில் வெவ்வேறு முறைகளில் மக்கள் மத்தியில் தோன்றுவார்.

பொய் காட்டுத்தீ போல் பரவி ஓய்ந்து போகும்.

ஆனாலும் சத்தியத்தின் சாட்சியாக வெளிப்பட்டிருக்கும் தேசத்தின் புதல்வி துவாரகா என்ற உண்மையை எவராலும் அழிக்க முடியாது.