அஞ்ஞாதவாசம் முடித்து வெளிவரும் துவாரகா!

பதற்றத்தில் புலித்தோல் போர்த்த ஓநாய்களைக் காட்டிக் கொடுத்த சிங்களம்! - சேரமான்

Published on 18/11/2023
அஞ்ஞாதவாசம் முடித்து வெளிவரும் துவாரகா!

தேசத்தின் புதல்வி செல்வி துவாரகா அவர்கள் தனது பதினான்கு ஆண்டு கால அஞ்ஞாதவாசத்தை முடித்துக்கொண்டு எதிர்வரும் 27.11.2023 அன்று மாவீரர் நாளில் தன்னை மக்கள் மத்தியில் வெளிப்படுத்துகின்றார்.

மாண்புமிகு துவாரகா அவர்கள் உயிரோடு இருப்பது ஏறத்தாள ஓராண்டுக்கு முன்னரே அரசல் புசலாகக் கசிந்த ஒரு செய்தி தான்.

ஆனாலும் கடந்த நான்கு மாதங்களாகத் தமிழ்த் தேசியப் பரப்பில் பிரதான பேசுபொருளாக துவாரகா அவர்களின் இருப்புப் பற்றிய செய்தியே திகழ்கின்றது.

முதலில் தேசத்தின் புதல்வி வெளிப்படுவதைத் தடுப்பதற்கான பகீரத பிரயத்தனங்களில் சிறீலங்கா புலனாய்வுத்துறையினர் ஈடுபட்டார்கள்.

இறுதி யுத்தத்தில் சிங்களப் படைகளிடம் சரணடைந்து, சக போராளிகளையும், இயக்க இரகசியங்களையும் காட்டிக் கொடுத்து, அதற்கு சன்மானமாக வெளிநாட்டிற்கு அனுப்பப்பட்ட முன்னாள் போராளிகளைப் பயன்படுத்தித் தேசத்தின் புதல்வி வெளிப்படுவதைத் தடுக்க சிங்களம் முற்பட்டது.

புலம்பெயர் தேசங்களில் தமிழ்த் தேசிய செயற்பாடுகளின் வீரியத்தைப் பலவீனப்படுத்துவதில் முன்னணிப் பாத்திரம் வகிக்கும் நபர்களைப் பயன்படுத்தித் துவாரகாவிடம் விலைபேசப்பட்டது.

'மாதம் ஒரு இலட்சம் பவுண்கள் தருகிறோம். நீங்கள் வெளிவர வேண்டாம். நீங்கள் தரும் வேலைகளை நாங்கள் செய்கிறோம்' என்று தேசியத் தலைவரின் மகளுக்கே பணத்தாசை காட்டி அவரை முடக்க முற்பட்டார்கள்.

அதுவும் கைகூடாது போக, 'பதினான்கு ஆண்டுகள் அமைதியாக இருந்து விட்டு நீங்கள் வெளிப்படுவது ஒருவரலாற்றுத் துரோகமாக அமையும்' என்று எதிரியிடம் சரணடைந்து வரலாற்றுத் துரோகம் புரிந்தவர்கள் கூக்கூரல் எழுப்பிப் பார்த்தார்கள்.

சாம, பேத, தான, தண்டம் என்பதாக இறுதியில் 'எங்களை மீறி ஒரு துரும்பையும் உங்களால் நகர்க்க முடியாது' என்று எச்சரித்தும் பார்த்தார்கள்.

அதையும் மீறி, துவாரகாவின் இருப்புப் பற்றிய உண்மைகள் வெடித்தெழுந்தன.

உண்மைகளுக்கு ஈடுகொடுக்க முடியாத சிங்களக் கைக்கூலிகள், பொய்மை என்ற ஆயுதத்தைக் கையிலெடுத்து தேசத்தின் புதல்வி துவாரகாவிற்கு அவதூறு விளைவிக்க முற்பட்டார்கள்.

ஆனாலும் தேசத்தின் புதல்வியின் இருப்பை உறுதிப்படுத்தி வெடித்தெழுந்த உண்மைகளின் முன்னால் சிங்களக் கைக்கூலிகளால் புனையப்பட்ட பொய்மைகள் எல்லாம் தவிடு பொடியாகின.

இனி மாவீரர் நாளுக்கு ஒரு வாரம் தான் உள்ளது.


தனது கைக்கூலிகளைக் கொண்டு இனி எதையுமே செய்ய முடியாது என்பதை உணர்ந்து கொண்ட சிங்களம் இப்போது நேரடியாகவே களத்தில் இறங்கியிருக்கின்றது.

Artificial Intelligence எனப்படும் கணிமதியைக் கொண்டு துவாரகா போன்று ஒளிப்பதிவு ஒன்றை வெளியிடுவதற்குப் புலம்பெயர் தேசங்களில் ஆயத்தங்கள் நடப்பதாக கொழும்பு ஊடகமான டெய்லி மிரர் பத்திரிகை மூலம் நேரடியாகப் போலிப் பரப்புரைகளை சிங்களம் தொடங்கியுள்ளது.

இவ்விடயத்தில் சிங்களம் அமைதியாக இருந்திருக்கலாம்.

அதன் கைக்கூலிகள் தப்பியிருப்பார்கள்.

ஆனால் பதற்றத்தில் என்ன செய்வது என்று தெரியாது டெய்லி மிரர் பத்திரிகை மூலம் சிங்களம் தொடங்கியிருக்கும் போலிப் பரப்புரைகள் அதன் கைக்கூலிகளை இப்போது மக்கள் மத்தியில் பட்டவர்த்தனமாக்கியுள்ளது.

தேசத்தின் புதல்வி துவாரகா உயிரோடு இல்லை என்று யார் யாரெல்லாம் பதறியடித்து போலிப் பரப்புரைகளை முன்னெடுத்தார்களோ, அவர்கள் எல்லாம் தனது கைக்கூலிகள் என்பதை இப்போது சிங்களமே உறுதிப்படுத்தியுள்ளது.

இது வரை காலமும் புலித்தோல் அணிந்திருந்த ஓநாய்கள் எல்லாம் இப்போது புலித்தோல் உரிந்து போய் விழ அசிங்க முகத்தோடு நிற்கின்றன.

மாண்புமிகு துவாரகா அவர்களின் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரை திட்டமிட்டபடி எதிர்வரும் 27.11.2023 அன்று வெளிவரும்.

அதை இனி யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

தேசத்தின் புதல்வி துவாரகா உயிரோடு இருக்கும் போது, கணிமதியைப் (Artificial Intelligence) பயன்படுத்தி அவரைப் போன்று போலியான ஒளிப்பதிவு ஒன்றை உருவாக்க வேண்டிய தேவை எவருக்கும் இல்லை.

அப்படி ஒரு ஒளிப்பதிவைக் கணிமதியைப் பயன்படுத்தி உருவாக்க முடியுமாயின் எப்போழுதே தேசியத் தலைவர் உரையாற்றுவது போல் ஆயிரம் ஒளிப்பதிவுகளை உருவாக்கியிருக்க முடியும்.

நாட்கள் நெருங்க நெருங்கத் தமிழீழ தேசம் எழுச்சிக் கோலம் பூணுகின்றது.

மாண்புமிகு தேசத்தின் புதல்வியின் முதலாவது அரசியல் பிரவேசத்தோடு தமிழீழ தேசம் அடுத்த கட்ட அரசியல் களத்திற்கு நகரத் தயாராகின்றது.

இதனால் பதறுவதைத் தவிர சிங்களத்திற்கு வேறு தெரிவுகள் இல்லை.

தமது கையை மீறி எல்லாம் நடப்பதை எண்ணிப் புழுங்குவதைத் தவிர சிங்களக் கைக்கூலிகளுக்கும் வேறு தெரிவுகள் இல்லை.

காலத்தின் கட்டளையாகத் தனது பதினான்கு ஆண்டுகால அஞ்ஞாதவாசத்தை முடித்துக் கொண்டு தேசத்தின்புதல்வி வெளிப்படுகின்றார்.

சூதுகவ்விய தர்மம் மீண்டும் தலையை உயர்த்தித் தேசத்தின் தலைமகளை வரவேற்கத் தயாராகின்றது.

நாமும் மாண்புமிகு துவாரகா பிரபாகரன் அவர்களை வரவேற்கத் தயாராகுவோம்.