பண்டைக் காலத்தில் தமிழர்களாக மட்டும் எமது ஈழத்தீவின் குடிமக்கள் வாழ்ந்த போது பனை வளம் கொண்டதாக ஈழத்தீவு விளங்கியதால் அத்தீவை ஈழ நாடு என்று சங்கத் தமிழர்கள் அழைத்தார்கள்.
சங்க இலக்கியங்களான அகநானூறு, புறநானூறு, பட்டினப்பாலை, மதுரைக்காஞ்சி ஆகியவற்றில் ஈழம் பற்றிய குறிப்புகளை நீங்கள் படிக்கலாம்.
அடுத்தது சங்கம் மருவிய காலத்தில் தாலி கட்டும் முறை தமிழர்களிடையே அறிமுகமாகிய பொழுது பனை ஓலைச் சுருளே திருமணத்திற்கான அத்தாட்சியாக விளங்கியது.
அந்தப் பனை ஓலைச் சுருளையே மஞ்சள் கயிற்றில் கட்டி அணிந்தார்கள்.
பனையை அக்காலத்தில் தாலி என்றும் அழைத்தார்கள். அதனால் திருமணத்தின் அத்தாட்சியாக கழுத்தில் கட்டப்பட்டதை தாலி என்றும் அழைத்தார்கள்.
ஆக ஈழம், பனை, தாலி ஆகிய மூன்றும் ஒன்றோடொன்று தொடர்புபட்டவையாகும்.
தமிழர் வாழ்வில் தாலி அறிமுகம் ஆவதற்கு முன்னர் நடைமுறையில் இருந்த திருமணச் சடங்கு பற்றிய குறிப்புகளை அகநானூற்றில் நீங்கள் படிக்கலாம்.