புரட்சிப் பாவலர் மாமனிதர் காசி ஆனந்தன் எழுதியது!
இது தான் உண்மையான தமிழன் கனவு!
வாழும் காலத்தில் மாமனிதராக ஈழத்துக் கரிகாலனால் மதிப்பளிக்கப்பட்ட தமிழீழத்தின் புரட்சிப் பாவலர் காசி ஆனந்தன் ஐயாவால் 1968ஆம் ஆண்டு எழுதப்பட்டது.
ஆயிரம் பேர் தமிழன் கனவு என்ற தலைப்பைத் திருடிப் பொத்தகம் வெளியிட்டாலும், வரலாற்றில் என்றும் உயிர் வாழப் போவது காசி ஆனந்தன் ஐயாவின் தமிழன் கனவு தான்.
காசி ஆனந்தன் ஐயாவின் தமிழன் கனவை வாழ்த்தியவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல: பாவேந்தர் பாரதிதாசன், தந்தை செல்வா, கலைஞர் மு. கருணாநிதி, சி.ப.ஆதித்தனார் - இப்படி வாழ்த்தியோரின் வரலாறும் நீண்டு செல்லும்.
மற்றவர்களின் ஆக்கங்களை (தலைப்புகள் உட்பட) புலமைத் திருட்டு செய்வோர் வெட்கித் தலை குனியுங்கள்.